
அரசியல் களம் தேசிய அளவில் சூடு பிடிக்க ஆரம்பிக்க விட்டது. நேற்று ((29 மார்ச் 2009) பி.ஜே.பியின் பிரதமர் வேட்பாளர் திரு எல். கே. அத்வானி செய்தியாளர்களிடம் பேசிய போது ஒரு புதிய குண்டை போட்டார். சுவிஸ் வங்கிகளில் இந்திய கள்ள பணம் 25 லட்சம் கோடி முதல் 70 லட்சம் கோடி வரை இருப்பதாகவும், பிஜேபி ஆட்சிக்கு வந்தால், அந்த கள்ள பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதகவும் கூறினார்.
வருகிற் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் ஜி-20 மாநாட்டில், இந்த பிரச்சனையை பிற நாடுகள் எழுப்ப இருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமயத்தில், திரு அத்வானி இந்த பிரச்சனைய எழுப்புவது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த விவகாரத்தில் எத்தனை பெரிய தலைகளின் பெயர் அடிபடப்போகிறதோ - இறைவனுக்குத்தான் வெளிச்சம்.
இது பற்றி தமிழக பிஜேபியின் மாநில துணை தலைவர் திரு ஹெச். ராஜா அவர்களுடன் தொலைபேசியில் வெற்றிகுரலுக்காக பேட்டி எடுத்தேன். திரு ராஜா ஒரு சார்ட்டர்டு அக்கவுண்டண்ட். உயர் பதவியிலுள்ள பலருக்கு, சுவிஸ் வங்கியில் பணம் இருப்பதாக கூறினார். அவரது முழு பேட்டியையும், கீழ்கண்ட பிளாஷ் பிளேயரில் 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும். இந்த ஆடியோ, பிராட்பேண்ட் கனெக்ஷனில் சீராக வரும். ஆடியோ சீராக இல்லையென்றால், டவுன்லோடு செய்து mp3 பிளேயரில் கேட்கவும். (14 நிமிடம்)
இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்
http://www.podbazaar.com/permalink/144115188075857383
ராஜாவின் பேட்டி பல உண்மைகளை பாரதிய ஜனதா ஒப்புக்கொள்வதில் தயக்கம் காட்டவில்லை என்று தெரிகிறது.இவரை வைத்து மட்டும் BJP முழுவதும் எடை போட முடியாது.
பதிலளிநீக்குதிரு அத்வானி பற்றிய சொன்ன தகவல் பல மக்களை சென்றடைய வேண்டும் இதன் மூலமாவது ஒரு நல்ல தலவரை நம் நாடு முழுவதும் அறிந்துகொள்ள வசதியாக இருக்கும்.இவரைப்போல் ஒரு சிலர் மாநிலத்துக்கு இருந்தால் போதும் நம்நாடு சிறக்கும்.