This blog is written in Tamil unicode. If you are not able to see the fonts properly, please change the 'character encoding' in your browser to Unicode UTF 8

செவ்வாய், 22 ஜூன், 2010

ஆர்பாட்டம் இல்லாமல் வைணவம் வளர்க்கும் தமிழ் - செம்மொழி மாநாட்டு சிறப்பு பதிவு

வெற்றி குரல் இதழ் 17

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு, கோவையில் மிகுந்த ஆடம்பரத்துடனும், பிரும்மாண்டமுமாய் துவங்கிவிட்டது.  பல அறிஞர்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை பேச இருக்கிறார்கள்.  சுமார் ரூபாய் 600 கோடி செலவில் நடத்தப்படும் இந்த மாநாட்டைப்பற்றி பல விமர்சனங்களும் எழுப்பப்படுகின்றன.   கலைஞர் தன்னை பாராட்டுவதற்காக  அரசு  செலவில்  நடத்தப்ப்டும் ஒரு தன்னல தம்பட்ட  விழா என்று  எதிர் கட்சிகள்  குற்றம்  சாட்டுகின்றன.

மற்றும், கலைஞர் இந்த மாநாட்டிற்கக எழுதிய "யாதும் ஊரே..யாவரும் கேளீர்" என்கிற பாடலை ஏ. ஆர். ரஹ்மான் இசை அமைத்து வெளியிட்டுள்ளார்கள்.  அதைப்பற்றியும் பல விமர்சனங்களும் வரத்தொடங்கி விட்டன.  தமிழ் மாநாட்டிற்கான இசையை, மேல் நாட்டு பாணியில் இசை அமைக்க வேண்டுமா என்றும், தமிழின் மென்மையை வெளிக்காட்டாமல், ஒரே காட்டுக்கூச்சலாக இருப்பதாகவும், பலர் எரிச்சல் படுகிறார்கள்.  பண்டைய தமிழ்நாட்டில், யாழ், வீணை, குழல், மத்தளம், வரிசங்கம் போன்ற பல இசைகருவிகள் இருநதன.  அவைகளில் பல, இன்றும் நம்மிடையே உள்ளன.  அந்த கருவிகளை உப்யோகித்து,  தமிழ் க்லாச்சாரத்திற்கு ஏற்ப மென்மையான இசையாக இருந்திருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றுகிறது என்றும் கூறுகிறார்கள். .  ஏ. ஆர். ரஹ்மானே அதை செய்திருக்கலாம். 

இந்த பாடலை கேட்ட ஒரு மூத்த பத்திரிகை நண்பர், "கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர், அவரது பாரம்பரிய உடையில் இருந்தால் தான் மரியாதை.  அதைவிட்டு, அவர், ஜீன்ஸ், டீ ஷர்ட் போட்டுக்கொண்டு அர்ச்சனை செய்தால் எப்படி இருக்கும்.  அது போன்று தான் இந்த செம்மொழி பாடல் இருக்கிறது" என்று விமர்சித்தார்.

எது எப்படி இருந்தாலும், செம்மொழி மாநாடு தமிழை வளர்க்க முயற்சித்தால், நல்லது தான்.  தமிழ் செம்மொழி ஆவதற்கு முக்கிய காரணமே, பல ஆயிரக்க்ணாகான ஆண்டுகளாக தமிழுக்கு ஏற்றம் கொடுத்து, இறைவனது கருவறையிலிருந்து, வீதிவரை தமிழை உபயோகிக்கும் சைவ, வைணவ திருக்கோவில்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது.  ஆழ்வார்களும், நாயன்மார்களும் இறைவனை தமிழில் வழிபட வழிகாட்டினார்கள். . 

பாடல் பெற்ற அனைத்து திருத்தலங்களின் இறைவன், இறைவியின் திருப்பெயர்கள் தமிழில் உள்ளன.  அனத்து வைணவ திருத்தலங்களிலும், கோவிலின் கருவறை திறக்கும் போது 'திருப்பள்ளி எழுச்சி" பாடுவது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது.  திருவரங்கத்தில்,   இந்த தமிழ் பாசுரம், பண்டைய தமிழ் இசை க்ருவியான வீணையில் இசைக்கபடும்.   திருப்பாவை, மற்றும் ப்ல்லாண்டு பாசுரம் பாடியபிறகுதான, அனைத்து வைணவக் கோவில்களிலும், (திருப்பதி உட்ப்ட), தினந்தோறும் தீர்த்த பிரசாதம் வழங்கப்படும்.  இது தவிர, இறைவனை இரவில், பள்ளியறையில் எழுந்தருளச் செய்யும்  போதும், தமிழ் பாசுரங்கள் தான் பாடப்படும். 

அனைத்து வைணவ திருக்கோவில்களிலும், மார்கழிமாதம், தமிழ்த் திருவிழாவாக கொண்டாடப்படும்.  திருவரங்கத்தில், 'அரையர்கள்' என்கிற ஒரு பிரிவினர், தமிழ் பாசுரங்களுக்கு, அநத மார்கழி மாதத்தில், பண்ணிசைத்தும், நடனமாடியும். இறைவனை வழிபடுவார்கள்.

இன்றும் பல  வைணவ இல்லங்களிலும், திருக்கெண்ணமுது (பாயசம்), அக்கார வ்டிசில் (பாயசம்), நெகிழ் கறி அமுது (சாம்பார்), சாற்றமுது (ரசம்), கறி அமுது (பொறியல்), மடப்பள்ளி (சமையலறை), திருமஞ்சனம் (அபிஷேகம்), திருமண் (நெற்றியில் இடப்படும் திரு நாமம்). அகம் (வீடு), அமுது செய்வது (இறைவனுக்கு  உணவு படைப்பது)   போன்ற தூய தமிழ்சொற்கள் வழக்கத்தில் உள்ளன.  இந்த தூய தமிழ் சொற்களை பிறர் (டி.விகள் உட்பட) கேலி செய்வதால், பலர் வெளியில் உபயோகப்படுத்தவும் தயங்குகிறார்கள்.  இதுதான்,  தமிழ் பேசுபவர்களுக்கு ஏற்படும் இன்றைய நிலை. 

வைணவ திருக்கோவில்களிலும், இல்லங்களிலும்  தமிழை உபயோகப்படுத்தும்  முறையை இராமானுஜர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்  தோற்றுவித்தார்.   செம்மொழி மாநாடு போல ஆர்ப்பாட்டம்   ஆரவாரம்  இல்லாமல், ஆயிரக்கணக்கான  ஆண்டுகளாக,   சைவ மற்றும்  வைணவ திருக்கோவில்கள் தமிழை வளர்து வருகின்றன.   இந்த மாநாட்டில், ஆன்மீகத்தமிழிற்கு அதிக முக்கியத்துவம் இல்லாததால், வெற்றிகுரலின் பங்களிப்பாக, "வைணவத்தில் தமிழ்" என்கிற தலைப்பில்,  வைணவப்பிரபந்தங்களில் பிரபல ஆராய்ச்சியாளர் தேரழுந்தூர் (கம்பன் பிறந்த ஊர்) திரு கோசகன் அவர்களுடன் தொலைபேசியில். ஒரு பேட்டி க்ண்டேன். 

இந்த பேட்டியை (20 நிமிடங்கள்) 'பிளே' பட்டனை அமுக்கி கேட்கவும்.  இந்த ஆடியோ, பிராட்பேண்டில் சீராக வரும்.  ஏதாவது தடங்கல் இருந்தால், இந்த லிங்கை வலது கிளிக் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து கேட்கவும்.



இந்த பேட்டியை கீழ்கண்ட தளத்திலும் கேட்கலாம்.
http://www.podbazaar.com/permalink/144115188075857495

2 கருத்துகள்:

  1. நான் சொல்ல விரும்பியது. பக்தி இலக்கியங்கள் அதோடு கூடிய இசைக் கலை இதெல்லாம் தான் தமிழை மூலை முடுக்கெல்லாம் பரவச் செய்தது. நம் மக்கள் வாய் மொழியாக, கேள்விச் செல்வமாக பெற்ற தமிழ் நேரடியாகக் கற்றதை விட அதிகம். அதற்கு துணை புரிந்தது பக்தி இலக்கியம்.
    உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு.

    சாமியே இல்லைன்னு சொல்லும் கூட்டம் இதை ஏற்குமா? :(

    தலைப்பில் சிற்ப்பு என்றுள்ளது. புள்ளியை எடுக்கவும்.

    பதிலளிநீக்கு

அடிக்கடி ஒரு திருக்குறள்

Related Posts Plugin for WordPress, Blogger...